காதலரை கரம்பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங்

காதலரை கரம்பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங்

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.  தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, தேவ், என்.ஜி.கே. ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  இதில் கார்த்தியின் ‘தீரன் அதிகாரம்’ படத்தின் மூலம்தான் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு சிவகார்த்திகேயனின் ‘அயலான்’  படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழை தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் பிசியாக நடித்து வரும் இவர்,  சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், நடிகருமான  ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்தார்.  இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பி வந்தது. 

காதலரை கரம்பிடித்தார் ரகுல் ப்ரீத் சிங்

இந்நிலையில், இருவரின் திருமணமும் கோவாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Share this story