ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ 2-வது சிங்கிள் ரிலீஸ்.. பிரம்மாண்ட மேக்கிங்..!
1727775077679
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இரண்டாவது பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர், ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் கியாரா அத்வானி நாயகி. அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜரகண்டி’ முதல் சிங்கிள் அண்மையில் வெளியானது. படம் டிசம்பர் மாதம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.‘ரா மச்சா மச்சா’ என தொடங்கும் இந்தப் பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். நகாஷ் அஜீஸ் பாடியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். பாடலில் வரும் பிரமாண்டமான விஷுவல் காட்சிகள் ஷங்கரின் படம் என்பதை நிரூபிக்கன்றன. தெலுங்கு, தமிழ், இந்தி மூன்று மொழிகளில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விஷூவல் கவனிக்கும்படியாக இருந்தாலும், தெலுங்கு டப்பிங் பாடல் போன்ற உணர்வு எழுகிறது. ராம் சரணனின் நடனம் கவனம் பெறுகிறது.