தள்ளிப்போகும் ராம் சரணின் ’பெத்தி’ திரைப்படம்..! ஒரு மாதம் தள்ளிப்போய் வெளியாகிறது..!

1

மெகா பவர்ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ’பெத்தி’ (PEDDI). பிரம்மாண்ட பான் இந்தியா படமாக உருவாகும் ’பெத்தி’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்திற்கு ஏ.அர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இப்படம் வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏப்ரல் 30 ஆம் தேதி கோடை விடுமுறைக்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், படக்குழு தீவிரமான புரமோஷன் பணிகளுக்கும் தயாராகி வருகிறது.

’பெத்தி’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸ், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த “சிக்கிரி சிக்கிரி” பாடல் அனைத்து தளங்களிலும் வைரல் ஹிட்டானது. இந்தப் பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதுடன், பல சாதனைகளை முறியடிதுள்ளது.‎வெளியீட்டு தேதி போஸ்டரில், ராம் சரண் இதுவரை காணாத முற்றிலும் புதிய, மாஸ் தோற்றத்தில் தோன்றுகிறார். நீளமான முடி, கனமான தாடி ஆகியவை ஸ்டைலான தோற்றத்தை அளிக்கின்றன.

வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் உருவாகி உள்ள ‘பெத்தி’ படத்தில் மிகச் சிறந்த தொழில்நுட்பக் குழு இணைந்துள்ளது. பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இப்படத்தில் இணைந்துள்ளார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பை கவனிக்க, அவிநாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பின் மூலம் படத்தின் உலகத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ரங்கஸ்தலம்’. இப்படம் மாபெரும் பெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது மீண்டும் அதே கூட்டணியில் உருவாகும் பெத்தி படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

Share this story