ராம் சரண் நடித்த 'கேம் சேஞ்சர்' படத்தின் புரமோஷன் பணி தீவிரம்
வருகிற 21ம் தேதி கேம் சேஞ்சர்' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் ’ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ’கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் ராம் சரண் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இப்படத்தை டிசம்பர் 20-ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தை பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வருவதாக தயாரிப்பு நிறுவனம் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது.
Get ready for a Sensational Evening like never before! 🔥
— Game Changer (@GameChangerOffl) December 15, 2024
The most iconic celebration for #GameChanger is set to dazzle✨ the USA.
📍 Curtis Culwell Center, 4999 Naaman Forest Garland TX 75040
🗓️ 21st DEC, 6:00 PM ONWARDS
Event By : @CharismaEntmt#GamechangerOnJAN10 🚁… pic.twitter.com/maH1GboFRB
இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலானது. கேம் சேஞ்சர் படத்தின் "ஜரகண்டி" மற்றும் `ரா மச்சா மச்சா' பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 3வது சிங்கிளான 'லைரானா' பாடல் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது.இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 21ம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புஷ்பா பட இயக்குநர் சுகுமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுகுமார் மற்றும் ராம் சரண் கூட்டணி கடந்த காலத்தில் 'ரங்கஸ்தலம்' எனும் நல்ல ஹிட் படத்தை வழங்கினார்கள். ராம் சரணின் 17வது படத்தை சுகுமார் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது..