ராம் எழுதி இயக்கியுள்ள படம், ‘ஏழு கடல் ஏழு மலை’-எப்போது ரிலீஸ் தெரியுமா ?

ram siva

திரைக்கு வந்த ‘கற்றது தமிழ்’, ’தங்கமீன்கள்’, ‘தரமணி’, ’பேரன்பு’, ’பறந்து போ’ ஆகிய படங்களை எழுதி இயக்கிய ராம், சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். தற்போது அவர் எழுதி இயக்கியுள்ள படம், ‘ஏழு கடல் ஏழு மலை’. நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். சர்வதேச விருதுகளை வென்ற இப்படம், பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. 46வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விருது விழா, ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா, ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றில் படம் திரையிடப்பட்டது. முன்னதாக டிரைலர் மற்றும் 2 பாடல்கள் வெளியானது.

இதையடுத்து எந்தவித அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில், சமீபத்தில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, இப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது ‘நமக்காய் ஒரு வானம்’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதை யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து ஆண்ட்ரியா பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதியுள்ளார். இதுவரை யுவன் சங்கர் ராஜா இசையில் ஆண்ட்ரியா பாடிய ‘இதுவரை’ (கோவா), ‘ஏக் தோ தீன்’ (அஞ்சான்), ‘தீராத விளையாட்டு பிள்ளை’ (தீராத விளையாட்டுப் பிள்ளை), ‘அடடா வா அசத்தலாம்’ (சர்வம்) ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Share this story