சினிமாவில் புது அவதாரம் எடுக்கும் பிரபல இயக்குனர் -யார் தெரியுமா?
1765326621000
சர்ச்சைக்குரிய கருத்துகளின் மூலம் பரபரப்பு ஏற்படுத்தும் இயக்குனர் ராம் கோபால் வர்மா, தற்போது ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு ‘ஷோ மேன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வில்லனாக சுமன் நடிக்கிறார். நூதன் இயக்குகிறார். ராம சத்யநாராயணா தயாரிக்கிறார். அவர் கூறுகையில், ‘புதிய படம் தயாரிப்பதற்காக சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, நாகார்ஜூனா போன்ற முன்னணி ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டேன். பல மாதங்கள் காத்திருந்தும் சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால், ராம் கோபால் வர்மாவை ஹீரோவாக்கி விட்டேன். ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடிக்கிறார். பிறகு கொடுங்கள் என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டார்’ என்றார்.

