'விஷ்வம்பரா' படத்தின் 'ராம ராம' பாடல் ரிலீஸ்...

சிரஞ்சீவி, த்ரிஷா நடித்துள்ள 'விஷ்வம்பரா' படத்தின் 'ராம ராம' பாடல் வெளியாகி உள்ளது.
வசிஷ்டா இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், சிரஞ்சீவி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குத் திரைப்படம் 'விஷ்வம்பரா'. இப்படத்தின் முதல் சிங்கிளான 'ராம ராம' ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்டது.பிரம்மாண்டப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடலில் எண்ணற்ற நடனக் கலைஞர்களுடன் சிரஞ்சீவி ஆடும் லிரிக் வீடியோ வெளியான 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
అందరికి హనుమాన్ జయంతి శుభాకాంక్షలు ✨
— Chiranjeevi Konidela (@KChiruTweets) April 12, 2025
నా ఇష్టదైవం పుట్టినరోజున, తన ఇష్టదైవం గురించి పాట 🙏🏼#Vishwambhara First Single #RamaRaama out now 🏹
▶️ https://t.co/K4Lhlg2svw
Music by the Legendary @mmkeeravaani 🛐
Lyrics by 'Saraswatiputra' @ramjowrites ✒️
Sung by @Shankar_Live… pic.twitter.com/9bndNsydbq
'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க சங்கர் மகாதேவன், ஐரா உடுப்பி, லிப்சிகா பாஷ்யம் இப்பாடலைப் பாடியுள்ளார்கள். இப்பாடலுக்கு தமிழ் நடன இயக்குனர்களான ஷோபி பால்ராஜ், லலிதா ஷோவி நடனம் அமைத்துள்ளனர்.தெலுங்கு சினிமா பாடல்களில் வெளியான 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த சிரஞ்சீவியின் முதல் பாடல் இது. இன்றைய பல முன்னணி தெலுங்கு நடிகர்களுக்கு நடனத்தில் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் சிரஞ்சீவி. 70 வயதிலும் இந்தப் பாடலில் அசத்தலாக நடனமாடி உள்ளார்.