23 ஆண்டுகள் பிறகு இளையாஜாவுடன் இணையும் ராமராஜன்... வேற லெவலுக்கு செல்லும் ‘சாமானியன்’

SAAMANIYAN
 ராமராஜன் நடிப்பில் உருவாகும் ‘சாமானியன்’ படத்திற்கு இளையராஜா இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கிராமத்து கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் என்றாலே நடிகர் ராமராஜன் அனைவருக்கும் ஞாபகம் வரும். 80, 90-களில் கொடிக்கட்டி பறந்து வந்த அவர், சில காரணங்களில் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். ராமராஜனின் 45வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ‘சாமானியன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

SAAMANIYAN

இந்த படத்தில் ராமராஜனுடன் இணைந்து ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆர்.ராகேஷ் இயக்கும் இப்படத்தை Etcetera Entertainment சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் தயாரித்து வருகிறார். அச்சு ராஜாமணி இசையில் உருவாகும் இப்படத்திற்கு அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

SAAMANIYAN

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ராமராஜன் ஏராளமான படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்துள்ளன. தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

SAAMANIYAN

Share this story