ஆயிரம் கோடிக்கு மேல் வசூலில் ராமாயணா -ஒவ்வொரு நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா ?

ramayanam

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்பட பலர் நடிப்பில் கடந்த 5ம் தேதி தீபாவளியையொட்டி வெளியான பான் வேர்ல்ட் படம் ‘ராமாயணா’. ஏற்கனவே பலர் அறிந்த இதிகாச கதையாக இருந்தாலும், அதன் விஎப்எக்ஸ் மற்றும் பிரமாண்டத்தால் பல தரப்பினரை படம் கவர்ந்தது. படம் வெளியாகி உலக அளவில் இதுவரை மொத்தமாக ரூ.1000 கோடிக்கு மேல்  பாக்ஸ் ஆபீஸ் வசூலை ‘ராமாயணா’ படம் பெற்றுள்ளது.
இதில், இந்தியாவில் ரூ.910 கோடியும், வெளிநாடுகளில் ரூ.320 கோடியும் என மொத்தமாக 1000கோடிக்கு மேல்  வசூலித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், படம் வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் உலகளவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக கடந்த திங்கள்கிழமை மட்டும் ரூ.160 கோடி வசூலித்துள்ளது.
 மேலும் ‘ராமாயணா’ படத்தின் வசூல் ரூ.1500 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this story