"ராவணனை வதம் செய்பவராக சீதை இருந்தார்" -ராமாயண இயக்குனர் பேட்டி
‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்த சாய் பல்லவியை போர் வீராங்கனையாக காட்டியற்கு சில தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. சீதையை போர் வீராங்கனையாக காட்டியதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளதாக இப்பட இயக்குனர் நிதேஷ் திவாரி விளக்கம் அளித்துள்ளார்.
“சமஸ்கிருதத்தில் உள்ள ‘அத்புத ராமாயணம்’, ஒடியாவின் ‘பிலங்கா ராமாயணம்’ ஆகிய படைப்புகள், சீதையை பொறுமையின் வடிவமாக மட்டும் பார்க்காமல், பிரபஞ்ச சக்தியின் வடிவமாகவும், துடிப்பான போர் வீராங்கனையாகவும் சித்தரிக்கின்றன. சீதை வெறும் சகிப்புத்தன்மை உடையவராக மட்டும் இல்லாமல், தீவிரமான சக்தியின் வெளிப்பாடாகவும், ராமன் இயலாத நிலையில் மஹாகாளியின் உருவம் எடுத்து ஆயிரம் தலைகள் கொண்ட சகஸ்ர ராவணனை வதம் செய்பவராகவும் இந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று நிதேஷ் திவாரி விளக்கமளித்தார்.
இது நவீனகால பெண்ணியக் கருத்து அல்ல என்றும், இந்தியாவின் பல்வேறு இதிகாசப் பாரம்பரியங்களில் சீதையின் போர் குணங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளதாகவும் ‘ராமாயணா’ பட இயக்குனர் கூறினார்.

