இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்குபவர் எந்த நடிகரின் பாதுகாவலர் தெரியுமா ?
1780536602000
புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், சிவராஜ்குமார், ஜான்வி கபூர், ஜெகபதி பாபு நடித்துள்ள பான் இந்தியா படம், ‘பெத்தி’. திரைக்கு வருகிறது. தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு முன்னணி நடிகருமான ராம் சரணுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர், ரசிகைகள் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் ‘பெத்தி’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பெங்களூருவில் நடந்தபோது ரசிகர்கள் முண்டியடித்ததில், ராம் சரணின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், ராம் சரணின் பாதுகாவலரின் நடவடிக்கைகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச தற்காப்புக்கலை வீரரான கெவின் குண்டா, ‘பெத்தி’ டிரைலர் வெளியீட்டு விழாவில் ராம் சரணுடன் சென்று கூட்டத்தை ஒழுங்குபடுத்தியது வைரலானது. பாதுகாப்பு பணிக்காக கெவின் குண்டாவுக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து, இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் பாதுகாவலர்களில், முன்னணி இடத்தில் கெவின் குண்டா இருப்பதாக கூறப்படுகிறது.