‘கஸ்டடி’யில் இருக்கும் ‘ராம்கி’ – வாண்டட் போஸ்டர் வெளியீடு.

photo

வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகசைத்தன்யா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘கஸ்டடி’. நாக சைத்தன்யாவின் 22வது படமாக இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிவருகிறது.  நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கும் இந்தப் படத்திற்கு, இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர்.

photo

சமீபத்தில் நாக சைத்தன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கஸ்டடி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆக்க்ஷன் அதிரடியில் தான் இந்த படம் தயாராகி வருவது போஸ்டரை பார்த்தாலேயே தெரிந்தது அதிலும் குறிபாக  படத்தின் டைட்டிலின் கீழே வெங்கட் பிரபுவின் வேட்டை என குறிப்பிடப்பட்டிருந்தது  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

photo

இந்தப் படத்தில் சரத்குமார், அரவிந்த் சாமி, பிரியாமணி, பிரேம்ஜி, சம்பத் ராஜ், தெலுங்கு காமெடி நடிகர் வெண்ணிலா கிஷோர், சீரியல் நடிகை பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதேபோல், கஸ்டடி படத்தில் தற்போது நடிகர் ராம்கி இணைந்துள்ளதாக அறிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மோஸ்ட் வாண்டட் ஃபைலில் ராம்கியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. படம் வரும் மே மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Share this story