“சிவகார்த்திகேயன் ஒரு இன்ஸ்பிரேஷன்” – புகழ்ந்து தள்ளிய 'ரம்யா கிருஷ்ணன்'.

photo

சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டரான திரைப்படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ரம்யா கிருஷணன், ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரம்யாகிருஷ்ணன் சிவகார்த்திகேயனை இன்ஸ்பிரேஷன் என புகழ்ந்து பேசியுள்ளார்.

photo

அதாவது “சிவகார்த்திகேயனின் வெற்றி இமாலைய வெற்றி, வரும் காலத்தில் சாதிக்கவேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன். எது சொன்னாலும் அதை சவாலாக எடுத்துக்கொண்டு துடிப்புடன் செயல்படுவார்.  விஜய் டிவியில் அவர் தொகுப்பாளராக இருந்த சமயத்தில் நிச்சயம் அவர் ஹீரோவாக வருவார்  இல்லையென்றால் எனது பெயரை நான் மாற்றிக்கொள்வேன் என கூறியிருந்தேன். சிவாவை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என கூறியுள்ளார் ரம்யாகிருஷ்ணன்.

Share this story