சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்க போகும் பிரபல நடிகை யார்..?
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 ஆகிய இரண்டு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.இதில் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அக்டோபர் மாதம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.கே. 23 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தை முடித்தபின், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே இவர்கள் இருவரும் டான் திரைப்படத்தில் கூட்டணி அமைத்திருந்தனர். டான் படத்தின் மூலமாக தான் சிபி சக்ரவர்த்தி இயக்குனராக அறிமுகமானார்.இதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கைகோர்க்கவுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போதைய லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்தது இல்லை. இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது