தங்க கோவிலுக்கு விசிட் அடித்த ‘ரம்யா பாண்டியன்’- கலக்கல் கிளிக்ஸ்.

நடிகை ரம்யாபாண்டியன் அம்ரிஸ்டரில் உள்ள தங்க கோவிலுக்கு ஒரு விசிட் அடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மொட்டை மாடியில் எடுத்த போட்டோ ஷூட்டால் ஒரே நைட்டில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து விஜய்டிவியின் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு எக்கசக்கமான ரசிகர்களை பெற்றார். தொடர்ந்து இவரது இன்ஸ்டாவில் பலர் ஃபாலோ செய்தனர். அடுத்ததாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இடையில் சில படங்களிலும் நடித்துள்ளார்.
என்னதான் இவர் ஒரு நடிகையாக இருந்தாலும் ரம்யாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்திற்கு என தனி ரசிகர் கூட்டமே உண்டு. அதில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் சில நேரங்களில் வைரலாவதும் உண்டு. இந்த நிலையில் சமீபகாலமாக ஆன்மீகத்தில் அதிக நாட்டம்கொள்ளும் ரம்யா பாண்டியன் பஞ்சாப்பில் உள்ள அம்ரிஸ்டர் தங்க கோவிலுக்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளார். அந்த தங்க கோவிலுக்கு முன்பு வெள்ளி தேவதைப்போல வெள்ளை நிற உடையில் மிக அழகாக உள்ளார் ரம்யா.