கோலாகலமாக நடைபெற்ற ரம்யா பாண்டியனின் தம்பி திருமணம்...!
1738504657433

நடிகை ரம்யா பாண்டியனின் தம்பி பரசு பாண்டியன் திருமணம் இன்று நடைபெற்று இருக்கிறது.
நடிகை ரம்யா பாண்டியன் படங்கள் மூலமாக பாப்புலர் ஆனதை விட விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ஷோக்களில் பங்கேற்று தான் பெரிய அளவில் பாப்புலர் ஆனார். அவர் கடந்த வருடம் தனது காதலர் லவெல் தவான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரிஷிகேஷில் அவர்கள் திருமணம் விமரிசையாக நடைபெற்றது. இந்நிலையில் தற்போது ரம்யா பாண்டியரின் சகோதரர் பரசு பாண்டியன் திருமண நடைபெற்று இருக்கிறது. அதை குடும்பத்தினருடன் உடன் ரம்யா பாண்டியன் மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார். அதுதொடர்பாக ஒரு நெகிழ்ச்சியான பதிவையும் வெளியிட்டுள்ளார்.