"ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயம்" -இப்படி கூறும் நடிகை யார் தெரியுமா ?

ramya pandian

சமீபத்திய பேட்டியொன்றில் ரம்யா பாண்டியன் கூறியது: ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றாலே எனக்குள் பயம் வந்துவிடும். ரொம்பவே நர்வஸ் ஆகிவிடுவேன். எவ்வளவு அழுகின்ற காட்சியாக இருந்தாலும் சரி, ரோட்டில் உருண்டு புரளும் காட்சியாக இருந்தாலும் சரி, காட்டுக்குள் நடக்கும் சீனாக இருந்தாலும் சரி. எதற்குமே நான் யோசிக்கவேமாட்டேன்.

எனக்கு பயமும் இருக்காது, ஆனால் ரொமான்ஸ் சீன், இண்டிமேட் காட்சிகளில் நடிக்கும்போது மட்டும் என் மனதிற்குள் பயம் வந்துவிடும். அந்த பயம் வெளியே தெரியக்கூடாது. நல்லபடியாக நடித்து முடிக்க வேண்டும் என்பதற்காக நான் சாமி எல்லாம் கும்பிடுவேன், ஆனால் அதுவும் நம்முடைய வேலையில் ஒரு பகுதிதான்.

Share this story