சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் நடிக்கும் தெலுங்கு நடிகர் -யார் தெரியுமா ?

parasakthi

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து பல இயக்குனர்கள் படமெடுத்து வருகின்றனர் .அதில் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி  படமும் ,சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்த்தி படமும் முக்கியமானவை 
தமிழ்நாட்டில் 1965ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவம் தான் ‘பராசக்தி’ படத்தின் கதை என சொல்லப்படுகிறது.
அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் இந்தி திணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதையெல்லாம் இயக்குனர் சுதா கொங்கரா ‘பராசக்தி’ படத்தில் காட்டியிருப்பதாக தெரிகிறது. அதற்காக தான் மலையாளத்தில் இருந்து பசில் ஜோசப், கன்னடத்தில் இருந்து தனஞ்சயா ஆகியோரை இப்படத்தில் சுதா கொங்கரா நடிக்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தெலுங்கில் இருந்து ராணாவை நடிக்க தேர்வு செய்துள்ளார். கதைப்படி கேரளா நாட்டில் நடந்த போராட்டங்களுக்கு பசில் ஜோசப் தலைமை தாங்குவதாகவும், அதுபோல ஆந்திரா போராட்டத்திற்கு ராணா தலைமை தாங்குவதாகவும் காட்சிகள் படத்தில் இடம்பெற உள்ளது.

Share this story