தமிழில் வெளியாகும் ராம் சரணின் பிளாக்பஸ்டர் ஹிட் தெலுங்கு படம்!

தமிழில் வெளியாகும் ராம் சரணின் பிளாக்பஸ்டர் ஹிட் தெலுங்கு படம்!

தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ரங்கஸ்தலம் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.  

கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் நடிகர் ராம் சரண் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரங்கஸ்தலம். சமந்தா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஜெகபதி பாபு, ஆதி, பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவி பிரசாத் இசையமைத்திருந்தார்.  இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

Image

இந்நிலையில் தெலுங்கில்  சூப்பர் ஹிட்டான இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இன்று மாலை இந்தப் படத்தில் தமிழ் ட்ரைலர் வெளியாக இருப்பதாகவும், படம் ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரங்கஸ்தலம் தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.

Share this story