‘ராங்கி’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி – வொர்த் டூட்…..தரமான செய்கை.

photo

த்ரிஷாவின் அதிரடி ஆக்க்ஷனில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’, இந்த படம் வரும் 30ம் ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரோமோஷனில் திரிஷா திவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது படத்தின் ஸ்னீக்பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

photo

பெண்மைய்ய கதாபாத்திரமாக தயாராகியுள்ள இந்த படத்தில் திரிஷா துணிச்சலான செய்தியாளராக நடித்துள்ளார். இந்த படத்தில் த்ரிஷாவின் பெயர் தையல் நாயகி என்பது வீடியோவில் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இரவில் தனியாக வரும் த்ரிஷாவிடம் போலீஸ் தவறான முறையில் வார்த்தைகளை விடுவதையும் அதனை அவருக்கே தெரியாமல் த்ரிஷா வீடியோ பதிவு செய்வதையும் காணலாம். தொடர்ந்து இந்த வீடியோவை அவர் என்ன செய்வார்? என்பதை படத்தை பார்த்தால் தான் தெரியும்.

photo

தரமான ஸ்னீக்பீக் காட்சியை படக்குழு வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்பை எகிற செய்துள்ளனர். மேலும் த்ரிஷாவை பல நாட்களுக்கு பிறகு இப்படி பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாக த்ரிஷாவின் ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.


 

Share this story