‘ரங்கோலி’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது….

photo

இயக்குநர் வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள  திரைப்படம்ரங்கோலி’. கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து படத்தை  தயாரிக்கின்றனர்.இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ஆடுகளம் முருகதாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

photo

இந்த படத்திற்கு கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைப்பாளராகவும், மருதநாயகம் ஒளிப்பதிவாளராகவும், ரா.சத்திய நாராயணன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

photo

ரங்கோலிபடத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் மற்றும் கேரளா  ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. படத்தின் படபிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்ட்டரை நடிகர் அதர்வா வெளியிட்டுள்ளார்.

photo

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

photo

Share this story