‘ரஞ்சிதமே…. ரஞ்சிதமே…’ பாடலின் ஷிவானி நாராயணன் வெர்ஷன்- செம கியூட்.

photo

புகைப்படம், வீடியோ என சமூக வலைதளத்தில் வெளியிட்டு  ரசிகர்களை மயக்கும் ஷிவானி தனது இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த ஷிவானிக்கு பம்பர் வாய்ப்பாக வந்ததுதான் பிக்பாஸ் , அதற்கு பிறகு ஷிவானி ஆளே மாறிப்போய் விட்டார், அதாவது முன்பைவிட சற்று தூக்கலாகவே கவர்ச்சி காட்டி வருகிறார்.

photo

வெள்ளிதிரைக்கு வந்த ஷிவானி  விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளுள் ஒருவராக நடித்திருப்பார், அடுத்து வீட்ல விசேஷம் படத்தில் நடித்தார். நாய் சேகர் ரிட்டன்ஸ், விஜய் ஆண்டனியுடன் ஒரு படம் என வெளியாக உள்ளது.

photo

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல் ‘ரஞ்சிதமே……ரஞ்சிதமே….’ ,இந்த பாடலிற்கு பல ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

photo

அந்த வகையில் இணையவாசிகளின் கனவு கன்னியான ஷிவானி நரயணன் தற்பொழுது  ஸ்டாபெரியை போல சிவப்பு உடையில் கியுட்டாக நடனமாடி அதை ரசிகர்களுக்காக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share this story