‘ரஞ்சிதமே’ பாடலின் BTS வீடியோ வெளியீடு – சிங்கிள் டேக்கில் ஆடி அசத்தும் தளபதி விஜய்.

photo

குடும்ப பின்னணியில் தயாரான விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவோடு சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.  படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து அசத்தினார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே வேற லெவல் ஹிட்டானது.  அதிலும் குறிப்பாக ஐக்கானிக் பாடலாக அமைந்த ‘ரஞ்சிதமே…ரஞ்சிதமே….” பாடல் அதிரிபுதிரி ஹிட்டானது.

photo

ஜானி மாஸ்டர் நடனம் அமைத்த இந்த பாடல் கேட்பதற்கு செம vibeஆகவும், பார்ப்பதற்கு கலர்ஃபுல்லாகவும் இருக்கும். தற்போது இந்த பாடலின் BTS வீடியோ ஒன்று வெளியாகி செம வைரலாகிறது. அதிலும் இந்த வீடியோவில் விஜய் சிக்கிள் டேக்கில் ஆடி அசத்தியுள்ளார். 


 

வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘டான்ஸ் என்றால் அது விஜய் அண்ணாதான், ஒரு  ஸ்டெப் கூட மறக்காமல் ஆடியுள்ளார்’ என புகழ்ந்து வருகின்றனர். தற்போது விஜய்யின் வாரிசு திரைப்படம் உலக அளவில் பல கோடிகளை வசூலித்து வருகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

Share this story