நம்பர் ஒன் இடத்தை பிடித்த “ரஞ்சிதமே பாடல்”, உற்சாகத்தில் ரசிகர்கள்.

photo

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் “ரஞ்சிதமே…..ரஞ்சிதமே….” பாடல் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

தெலுங்கு  இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு. இந்தப்படத்தின் முதல் சிங்கிள் பாடலானரஞ்சிதமே ரஞ்சிதமேபாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. அந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார்

PHOTO

பாடலில் விஜய் ராஷ்மிகா மந்தானா இணைந்து ஆடும் நடனம் வேறா லெவல் என்றே சொல்லவேண்டும். பலருமே அந்த ஸ்டெப்பை ஆடி தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை வாரி வருகின்றனர். இந்த நிலையில் ரஞ்சிதமே பாடல் இது வரை 45M பார்வையாளர்களை பெற்றுள்ளது.

photo

அந்த வகையில் யூடியூபில் பாடல்கள் குறித்து  Music Global Charts பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Global டாப் 100 மியூசிக் வீடியோஸ் பட்டியலில், ரஞ்சிதமே பாடல் No.1 இடத்தை பிடித்து இருக்கிறது.

இந்த தகவல் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

Share this story