‘விஜய்’யின் ‘வாரிசு’ திரைப்படத்திலிருந்து ‘ரஞ்சிதமே’ வீடியோ பாடல் வெளியீடு.

விஜய் ராஷ்மிகா கூட்டணியில் கடந்த மாதம் 11அம் தேதி வெளியாகி சூபர் ஹிட் பெற்ற திரைப்படம் ‘வாரிசு’ இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி படைபள்ளி இயக்கியிருந்தார். குடும்ப உறவுகளில் நிகழும் சிக்கல்களையும், தொழில் போட்டியையும் மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தில்ராஜு படத்தை தயாரித்திருந்தார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரபு, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
உலக அளவில் சூபர்ஹிட்டான இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதிலும் குறிப்பாக ‘ரஞ்சிதமே…….ரஞ்சிதமே….’ நடிகர் விஜய், பாடகி மான்சி இணைந்து பாடிய இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பாடல் வெளியான சமயத்தில் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்த இந்த பாடலை சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை பெரிதும் ரசித்தனர். இந்த நிலையில் தற்போது பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.
ஜானி மாஸ்டரின் தனித்துவமான நடனத்தில் விஜய் ராஷ்மிகா இணைந்து ஆடிய பாடல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.