சக்திமான் படத்தில் நடிக்கும் ரன்வீர் சிங்

சக்திமான் படத்தில் நடிக்கும் ரன்வீர் சிங்

சூப்பர் ஹீரோ கதைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகை படங்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. இந்தியாவைப் பொறுத்த வரை 90-ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சூப்பர் ஹீரோ யார் என்றாலே சக்தி மான் தான்.  இந்நிலையில் சக்திமான் திரைப்படமாக வெள்ளித் திரையில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோனி பிக்சர்ஸ் இந்தியா இந்தப் படத்தைத் தயாரிக்கின்றார். இந்தப் படம் மூன்று பாகங்களாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரிஜினல் சக்திமான் தொடர் டிடி நேஷனலில் எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டது. சக்திமான் தொடரில் நடித்த முகேஷ் கன்னாவின் பீஷ்ம் இன்டர்நேஷனல்  உடன் கூட்டணி அமைத்துள்ளனர். 

சக்திமான் படத்தில் நடிக்கும் ரன்வீர் சிங்

 பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். விரைவில் படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story