"ஜனநாயகன் படத்தில் செம ராப் பாடல்..." : இசைக் கலைஞர் அனுமான் கைண்ட்

jananayagan

விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தில் செம ராப் பாடல் பாடியுள்ளதாக ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் தெரிவித்துள்ளார். 

வினோத் இயக்கும் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே மீண்டும் இதில் இணைந்துள்ள நிலையில், ஸ்ருதிஹாசன், மமிதா பைஜூ, பாபி தியோல் என பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் உலக அளவில் புகழ்பெற்ற ராப் இசை பாடகர் ஹனுமான் கைண்ட் என்பவர் ஒரு பாடல் பாடி இருக்கிறார்.jananayagan

இது குறித்து அண்மையில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஒரு செம ராப் பாடல் பாடி உள்ளேன். இன்னும் தமிழ் படங்களுக்காக நிறைய பாடல்கள் பாட போகிறேன். பல அதிரடி சம்பவங்கள் காத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே இவர் பாடிய பிக் டாக்ஸ் என்ற பாடல் உலக அளவில் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story