புஷ்பாவை தொடர்ந்து அல்லு அர்ஜூனுடன் நடிக்கும் பிரபல நடிகை -யார் தெரியுமா ?

allu arjun

அல்லு அர்ஜுன்  ஒரு தெலுங்குத்  நடிகரும், தயாரிப்பாளரும், விளம்பர நடிகரும், நடனக் கலைஞரும் இயக்குநருமாவார். இவர் ஆர்யா, தேசமுடுரு, சங்கர் தாதா சிந்தாபாத், ஆர்யா 2, வருடு, வேதம், ரேஸ் குர்ராம் உள்ளிட்ட 20ற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு முறை நந்தி விருதுகளைப் பெற்றவர். திரைப்படங்களில் நடிப்பதோடு, சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். மேலும் புஷ்பா இரண்டு பாகங்களிலும் நடித்துள்ளார் 
இப்போது இயக்குனர் அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாக உள்ள  திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.
இந்த படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க உள்ளார். மேலும் மிர்னாள் தாக்கூர் மற்றும் ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் 
பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதற்கு அதிக எதிர்பார்ப்பு  உள்ளது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். 
மேலும் இப்படத்தில் , புஷ்பாவை போல நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுடன் இணைந்து மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மீண்டும் இந்த ஜோடி இப்படத்தில் கலக்க உள்ளது .

Share this story