மூணு மாசம் தூங்காமல் நடித்த நடிகை -யார் தெரியுமா ?

rashmika
நடிகை ராஷ்மிகா தமிழில் தனுஷுடன் குபேரா என்ற படத்த்தில் நடித்தார் .அந்த படம் மிகபெரிய வெற்றி பெற்றது .அடுத்து புஷ்பா என்ற படத்தில் நடித்தார் .அந்த படமும் மிகபெரிய வெற்றி பெற்றது .இந்நிலையில் அவர் மூணு மாசம் தூங்காமல் இருந்தது பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற தெலுங்கு மற்றும் தமிழ் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதை நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். அவர் கூறுகையில், ‘எங்கள் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, ராஷ்மிகா மிகவும் பிசியாக இருந்தார். ஒருபுறம் ‘புஷ்பா: தி ரூல்’ என்ற படப்பிடிப்பில் இருந்தார். மறுபுறம் எங்கள் படத்துக்கு நேரம் ஒதுக்கினார். அந்த படத்தின் ஷூட்டிங்கில் அதிகாலை 2 மணி வரை நடித்துவிட்டு, காலை 7 மணிக்கு எங்கள் படத்தின் ஷூட்டிங்கிற்கு வருவார். இப்படியே 3 மாதங்கள் வரை அவர் நிம்மதியாக தூங்கவில்லை. டிரஸ்ஸிங் ரூமில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு காலையில் படப்பிடிப்புக்கு வருவார். வேறு யாராலும் இவ்வளவு ஆதரவை வழங்கியிருக்க முடியாது. ராஷ்மிகா இல்லையென்றால் ‘தி கேர்ள் பிரண்ட்’ படமே உருவாகி இருக்காது’ என்றார்.

Share this story