விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் திருமணம்-எப்படி கொண்டாடினாங்க தெரியுமா ?

rashmika

நீண்ட நாட்களாக காதலித்து வந்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் திருமணம், கடந்த 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது. இத்திருமணம் தெலுங்கு மற்றும் கன்னட முறைப்படி நடந்தது. புதுமண தம்பதிகளான அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட முடிவு செய்து,  நாடு முழுவதும் 22 நகரங்களில் வசிக்கும் ரசிகர்களுக்கு இனிப்புகளை அனுப்பி வைத்தனர்.
லாரிகளில் ஐதராபாத், மும்பை, சென்னை, டெல்லி, பெங்களூரு, அகமதாபாத் உள்பட 22 நகரங்களுக்கு அவர்கள் இனிப்புகளை அனுப்பி வைத்தனர். மேலும், நாடு முழுவதும் இருக்கும் பிரபலமான 16 கோயில்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து நேற்று விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா வெளியிட்டிருந்த சோஷியல் மீடியா பதிவில், ‘இந்த நாட்டின் அழகான மக்களாகிய நீங்கள் எப்போதும் எங்கள் பயணங்களிலும், எங்கள் அன்பிலும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள்.
எங்கள் திருமணத்தை உங்கள் அனைவருடனும் இணைந்து கொண்டாடுவது, உண்மையிலேயே எங்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளிக்கும். இந்தியா எதையுமே இனிப்புடனும், உணவுடனும்தான் கொண்டாடும். எனவே, இன்று (நேற்று) எங்கள் வாழ்வின் இந்த பெரிய தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ள, நாடு முழுவதும் அன்பு மற்றும் இனிப்புகள் நிறைந்த லாரிகளை அனுப்பி வைக்கிறோம்.

Share this story