ரஞ்சிதமே பாடலுக்கு ஆட்டம் போட்ட ராஷ்மிகா

ரஞ்சிதமே பாடலுக்கு ஆட்டம் போட்ட ராஷ்மிகா

துபாயில் ரஞ்சிதமே பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா நடனமாடிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். சரத்குமார், பிரபு, சங்கீதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்திற்கு தமன் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனது. படம் வெளியாவதற்கு முன்பே இப்பாடல் பெரிய ஹிட் அடித்தது. 

null

இந்நிலையில், துபாய் சென்றுள்ள ராஷ்மிகா மந்தனா, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ரஞ்சிதமே பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this story