"அனைவருக்கும் தெரியும்படி உதவி செய்துள்ளேன்".-இதற்கு ராஷ்மிகா கூறும் காரணம் என்ன தெரியுமா ?

rashmika

காதல் திருமணம் செய்துகொண்ட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நட்சத்திர தம்பதி, தற்போது ‘புராஜெக்ட் அன்னபூர்ணா’ என்ற திட்டத்தை தொடங்கி, அதன்மூலம் 400 ஏழை குடும்பங்களை தத்தெடுத்து இருக்கின்றனர். இந்த விஷயத்தை பப்ளிசிட்டி செய்தது ஏன் என்பது குறித்து ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இதுவரை நான் 400 குடும்பங்களை தத்தெடுத்து இருக்கிறேன். 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்களுக்கு தேவையான அரசி, மாவு, எண்ணெய், பருப்பு ஆகியவற்றை அளிப்பேன்.

இது ஒவ்வொரு வருடமும் தொடரும். சமையலுக்கு தேவையான பொருட்களுக்கு செலவாகும் பணத்தை அவர்கள் சேமித்து, தங்களின் எதிர்காலத்தை சிறப்பாக பயன்படுத்தலாம். அன்புடன் செய்யும் சின்ன விஷயம் கூட ஒருவரது வாழ்க்கையை அடியோடு மாற்றும். அதுவும் பெரிய விஷயமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, நம்மால் இயன்ற அளவுக்கு சின்ன விஷயத்துடன் நல்ல விஷயத்தை தொடங்கலாம். இத்தனை ஆண்டுகளாக நான் சந்தித்த கஷ்டங்கள் அனைத்தும், இந்த மக்களின் சிரிப்பை பார்க்கும்போது அப்படியே மறந்துவிடுகிறது.

இதுவரை பல்வேறு உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்தேன். இம்முறை அதை அனைவருக்கும் தெரியும்படி செய்துள்ளேன். காரணம், நான் உதவி செய்வதை பார்த்து மற்றவர்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்பதாலேயே வெளியே சொல்லியிருக்கிறேன்.

Share this story