இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை ராஷ்மிகா...?

rashmika mandhana

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.
சமீபத்தில் அவர் பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்தார். அடுத்து தெலுங்கில் புஷ்பா 2, குபேரா மற்றும் தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இதையடுத்து இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக அவர் உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.rashmika

புஷ்பா 2 படத்துக்காக அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பதிலளித்துள்ள ராஷ்மிகா “என் சம்பளம் பற்றி வரும் தகவல்கள் உண்மையில்லை. அவையெல்லாம் வதந்திதான்.” எனக் கூறியுள்ளார். 
 

Share this story