‘நான் கடினமான நிலையில் உள்ளேன்’...பிறந்தநாளில் பகீர் கிளப்பிய ராஷ்மிகா மந்தனா !

rashmika mandana

தனது பிறந்தநாளில் நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்காக சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள அவர், தனது 27வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

rashmika mandana

 இந்நிலையில் தனது பிறந்தநாளில் ரசிகர்களுக்காக நடிகை ராஷ்மிகா மந்தனா சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்  ஹாய் டார்லிங்ஸ்.. இன்று நான் எப்படி இருக்கிறேன் என்பதை விட நீங்களெல்லாம் எப்படி இருக்கீங்க என்பது தான் முக்கியமானது.

rashmika mandana

எல்லாரும் சந்தோஷமாக இருப்பீங்க என்று நினைக்கிறேன். ஆனால் சிலர் வருத்தமாக இருக்கலாம். கடினமான சூழ்நிலையிலும் கூட இருக்கலாம். அதுபோன்ற சூழ்நிலையில் தான் நானும் சிக்கியிருக்கிறேன். ஆனால் எல்லாம் கடந்துபோகும் என நம்புங்கள். நீங்க எப்போதும் என்னிடம் அன்புகிறீர்கள். என்னுடைய முழு அன்பும் உங்களுக்குதான். நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பேன். நீங்களும் மகிழ்ச்சி இருக்கணும் என்று கூறி ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்துள்ளார். அதேநேரம் கடினமாக சூழ்நிலையில் இருப்பதாக ராஷ்மிகா மந்தனா கூறியதை கேட்ட ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

 

Share this story