ராஷ்மிகாவின் 'ரெயின்போ' முதற்கட்ட ஷூட்டிங் நிறைவு.. படக்குழு கொடுத்த அப்டேட் !

rainbow

நடிகை ராஷ்மிகாவின் 'ரெயின்போ' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 பிரபல நிறுவன தயாரிப்பில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘கீதா கோவிந்தம்’ படத்தின் மூலம் பிரபலமான அவர் தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தற்போது பிசியான நடிகையாக நடித்து வருகிறார். 

அந்த வகையில் பெண்ணை மையப்படுத்தி உருவாகும் 'ரெயின்போ' என்ற படத்தில் ராஷ்மிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமந்தாவின் ‘சகுந்தலம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் தேவ் மோகன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் சாந்தரூபன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.  

ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி உள்ளிட்ட படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஐஸ்டின் பிரபாகரன் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு கே.எம்.பாஸ்கர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

ஃபேண்டஸி கலந்த காதல் படமாக உருவாகும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதை அதிகாரப்பூர்வ படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

Share this story