கருப்பு புடவையில் கலக்கும் ராஷ்மிகா

கருப்பு புடவையில் கலக்கும் ராஷ்மிகா

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகத்தில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். தமிழ் தெலுங்கு மட்டுமன்றி தற்போது இந்தியிலும் அனிமல் உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

கருப்பு புடவையில் கலக்கும் ராஷ்மிகா

இந்நிலையில், அனிமல் படத்திற்கான புரமோசன் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. பட நிகழ்ச்சிக்காக சென்றிருந்த ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. கருப்பு புடவையில் கலக்கலாக இருக்கும் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
கருப்பு புடவையில் கலக்கும் ராஷ்மிகா

Share this story