தெலுங்கானா அரசுக்கு எதிராக கருத்து பதிவிட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா..!

தெலுங்கானா அரசு எடுத்த நடவடிக்கையை விமர்சனம் செய்து, நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் 400 ஏக்கர் காடு நிலத்தை அகற்றி, அந்த இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கு ஹைதராபாத் சென்ட்ரல் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துக் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, புல்டோசர் மூலம் அந்த இடத்தை அரசு ஆக்கிரமித்த நிலையில், மாணவர்கள் போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால், பல மாணவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தை முன்னிட்டு, நடிகை ராஷ்மிகா மந்தனா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். "இந்த செய்தியை இப்போதுதான் பார்த்தேன். இதைப் பார்த்து மனம் உடைந்து விட்டேன். மன்னிக்கவும், இது சரியல்ல, இது ரொம்ப ரொம்ப தவறு," என்று அவர் பதிவு செய்துள்ளார். மேலும், ஒரு உடைந்த இதய எமோஜியையும் அந்த பதிவில் சேர்த்துள்ளார் .