ராகுல் இயக்கத்தில் ராஷ்மிகா நடிக்கும் தி கேர்ள் ப்ரண்ட்

ராகுல் இயக்கத்தில் ராஷ்மிகா நடிக்கும் தி கேர்ள் ப்ரண்ட்

மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் ரகுல் ரவீந்திரன். தொடர்ந்து சூரிய நகரம், வணக்கம் சென்னை, தி கிரேட் இண்டியன் கிச்சன் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.  அதுமட்டுமல்லமல் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். நடிப்பதை தவிர மன்மதடு2, சில் லா சோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் நடிகை ராஷ்மிகாவை வைத்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையை படமாக எடுக்க உள்ளார். அந்த படத்தில் முதலில் சமந்தாதான் நடிப்பதாக இருந்தது ஆனால் சமந்தா மையோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை எடுத்து வருவதால் அவருக்கு பதி ராஷ்மிகா நடிக்க உள்ளார். ராஷ்மிகா தற்போது நடித்து வரும் புஷ்பா2 படத்தை முடித்து விட்டு ரெயின்போ என்ற படத்தில் நடிக்க உள்ளார். 

ராகுல் இயக்கத்தில் ராஷ்மிகா நடிக்கும் தி கேர்ள் ப்ரண்ட்

இந்நிலையில், படத்திற்கு தி கேர்ள் பிரண்ட் என்று தலைப்பு வைத்துள்ளனர். வீடியோ ஒன்றை வெளியிட்டு படத்தலைப்பை அறிவித்துள்ளனர். ஹிருதயம் படத்திற்கு இசை அமைத்த, அப்துல் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது
 

Share this story