'புஷ்பா 2' படத்தின் டப்பிங் பணியில் ராஷ்மிகா மந்தனா..!

pushpa 2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் புஷ்பா 2 . மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் வருகின்ற டிசம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் மீதமுள்ள ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளனர். முதலாவதாக ராஷ்மிகா சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர்.pushpa 2

டப்பிங் பேசிய போட்டோவை பகிர்ந்து, ‛‛புஷ்பா 2 படத்தின் முதல்பாதி டப்பிங் முடிந்து, இரண்டாவது பாதி டப்பிங் பணி நடக்கிறது. முதல்பாதியை விட இரண்டாம் பாதி பிரமாதமாக உள்ளது. என் வாழ்வில் சிறந்த அனுபவம் இந்தப்படம். என் முகம் இப்படி சோகமாக இருக்க காரணம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதே என்பது தான்'' என குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.

Share this story