'புஷ்பா-2' படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா
1733387103000
![BTS](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/3195f303836849007197112f7b8c3089.png)
இயக்குநர் சுகுமார் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புஷ்பா 2' இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். உருவாக்கி இருக்கிறார். புஷ்பா படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த படம் முன்பதிவில் மட்டும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் BTS புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .