அடிமேல் அடிவாங்கும் ‘வாரிசு’- இப்போ என்ன பிரச்சனை தெரியுமா?

photo

நடிகை ராஷ்மிகா, கன்னட திரைப்படங்களில் நடிக்கவும், அவர் நடித்த படங்களை கன்னடத்தில் ரிலீஸ் செய்யவும் தடைவிதிக்கப்பட உள்ள தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

photo

கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில்  வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின்  மூலமாக  கதாநாயகியாக அறிமுகமானார் ராஷ்மிகா.அதைத்தொடர்ந்து ராஷ்மிகாவிற்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து தெலுங்கில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு  நடித்து தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். தெலுங்கு தவிர்த்து இந்தி, தமிழ் என பல மொழிகளில் நடிக்க ஆரமித்தார். தற்பொழுது விஜயுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஆனால் தன்னை அறிமுகப்படுத்திய கன்னட திரையுலகம் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.

photo

இந்நிலையில், தற்போதைஅய தகவல் படி நடிகை ராஷ்மிகா, கன்னட திரைப்படங்களில் நடிக்கவும், அவர் நடித்த படங்களை கன்னடத்தில் திரையிடவும் தடைவிதிக்க கர்நாடக திரையரங்க உரிமையாளர்கள் மற்றும்  கன்னட திரைத்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை அறிமுகப்படுத்திய கன்னட திரையுலகை ராஷ்மிகா, தொடர்ந்து அவமதித்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் எனவும் விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

photo

ஒருவேளை நடிகை ராஷ்மிகா மீதான  தடை உறுதி செய்யப்பட்டால் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள ‘வாரிசு’ மற்றும் ‘பிஷ்பா2’  திரைப்படங்கள் கர்நாடக மாநிலத்தில் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே வாரிசு படத்திற்கு பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை வேறா. என படக்குழு நொந்து போய் உள்ளனர்.

photo

சமூக வலைதளத்தில் இந்த தகவல் வதந்தி என சிலர் கூறிவருகின்றனர்.இந்த தகவல் பற்றி அதிகார பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே மேற்படி நிலவரம் தெரியவரும்.

Share this story