‘’என்னால் நினைத்து கூட பார்க்கமுடியவில்லை…..’- வேதனையை பகிர்ந்த ராஷ்மிகா.

photo

இணையத்தில் வைரலான ஃபேக் வீடியோ குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

photo

குறுகிய காலகட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து நேஷனல் கிரஷ்ஷாக வலம் வரும் ராஷ்மிகா தொடர்ந்து புஷ்பா2, தனுஷின் 51வது படம் என கைவசம் எக்கசக்கமான படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் ராஷ்மிகா லிஃப்டிலிருந்து கருப்பு நிற டீப் நெக் உடையில் வருவதுபோன்ற வீடியோ வெளியானது. அந்த வீடியோ தீயாக வைரலான நிலையில் அது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும் உண்மை வீடியோ இதுதான் என்றும் புது வீடியோ வெளியானது. இதற்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கன்டனம் தெரிவித்த நிலையில் நடிகை ராஷ்மிகா” தொழில்நுட்பத்தை இப்படியா தவறாக பயன்படுத்துவது, இது போன்று தவறான செய்ல்கள் செய்பவர்களை பார்த்தால் எனக்கு பயமாக உள்ளது. இது போல ஒரு மோசமான தருணம் என் பள்ளி, கல்லூரி நாட்களில் நடந்திருந்தால் நான் எப்படி சமாளித்திருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.” என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

photo

Share this story