‘ஹீரோயின் சென்ட்ரிக்’ படத்தில் ‘ராஷ்மிகா’ – போஸ்டர் வெளியிட்ட படக்குழு.

photo

ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கும் அடுத்த படத்தின்  பூஜை இன்று தொடங்கப்பட்ட நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் இயக்குநர் யார் என்ற விவரத்தை அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

photo

ராஷ்மிகா மந்தனா தற்போது முதல் முறையாக பெண் மைய கதாப்பாத்திரத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க உள்ளார். இவர்களது தயாரிப்பில் ராஷ்மிகா நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும். முதல் படமாக சுல்தான் படத்தில் நடித்தார் அதுதான் அவரின்  கோலிவுட்டின் அறிமுகப்படமாகும். இந்த நிலையில் ராஷ்மிகா தற்போது ‘ரெயின்போ’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சாந்தரூபன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இவர்கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

photo

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கவுள்ளார். படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்ய ,ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார். ரெயின்போ படத்தில் முதலில் சமந்தா தான் நடிக்க இருந்தாராம். உடநல பிரச்சனையால் அவர் விலகியதால்தான் இந்த வாய்ப்பு ராஷ்மிகாவிற்கு சென்றதாம்.

photo

Share this story