வெறிதனமாக வொர்க்கவுட் செய்யும் ‘ராஷ்மிகா’.
கன்னட திரைப்படம் ஒன்றில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறிதனமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ராஷ்மிகா கீதாகேவிந்தம்’ படத்தின் மூலம் ஓவர் நைட்டில் இந்திய ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டார். தொடர்ந்து நேஷனல் கிரஷ் ஆக வலம் வந்த அவர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதேபோன்று விஜய்யுடன் இணைந்து ‘வாரிசு’ படத்தில் நடித்தார். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் ராஷ், தற்போது புஷ்பா 2 மற்றும் அனிமல் படத்தில் நடித்து வருகிறார்.
என்னதான் படங்களில் பிசியாக நடித்தாலும் இன்ஸ்டாகிரமில் புகைப்படங்கல், வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ராஷ்மிகா. அந்த வகையில் தற்போது ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு “ எனது உயிர் உடலை விட்டு சென்று மீண்டும் வருவது போல இருக்கிறது” என பதிவிட்டுள்ளார். என கேப்ஷன் கொடுத்துள்ளார்.