"படத்தை படமாக மட்டும் பார்த்தால் நல்லது"-அனிமல் படம் பற்றி நடிகை ராஷ்மிகா

rashmika

குபேராவில் தனுஷுடன் நடித்த தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ராஷ்மிகா மந்தனா, 'அனிமல்' படத்தில் ரன்பீர் கபூர் ஜோடியாக நடித்து பாலிவுட் சினிமாவையும் தொட்டதில் இருந்து 'பான் இந்தியா ஸ்டார்' ஆக மாறி போயிருக்கிறார்

அனிமல்" திரைப்படம், தந்தை மற்றும் மகன் உறவை மையமாகக் கொண்டது. தந்தையின் பாசத்திற்காக எதையும் செய்யத் துணியும் ஒரு மகனாக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். படத்தின் முதல் பாதி எமோஷ்னலாகவும், அதிரடி நிறைந்தும் உள்ளது. குறிப்பாக, கதாநாயகன் தன் அக்காவை கிண்டல் செய்யும் நபர்களிடம் துப்பாக்கியுடன் செல்லும் காட்சி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது, இயக்குனரின் முந்தைய படங்களைப் போலவே, இந்த படத்திலும் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ளன. திரைக்கதை ஒரு சில இடங்களில் யூகிக்கக்கூடியதாக இருந்தாலும், படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் விறுவிறுப்பாக செல்கிறது.

மொத்தத்தில், "அனிமல்" திரைப்படம், வன்முறை மற்றும் அதிரடி காட்சிகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ரன்பீர் கபூரின் நடிப்பு மற்றும் சில அதிரடி சண்டை காட்சிகள் படத்தை ஒரு வித்தியாசமான அனுபவமாக மாற்றுகிறது, மேலும் படத்தில் ராஷ்மிகாவின் கவர்ச்சிகரமான காட்சிகள்

 அளவுக்கு மீறி உள்ளதாக சில விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்

இந்த நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து ராஷ்மிகா ஆதங்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, படத்தை படமாக மட்டும் பார்த்தால் நல்லது. படத்தில் ஹீரோ படத்தில் ஹீரோ புகைபிடிக்கிறார் என்றால், அவர் எல்லோரையும் அப்படி செய்ய சொல்கிறார் என்று அர்த்தமாகி விடாது. அப்படி நினைத்தால் அதுபோன்ற படங்களை பார்க்க சொல்லி யாரும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சினிமா ஒரு பொழுதுபோக்கு துறை. எல்லாவற்றையும் விமர்சிப்பது சரியாகாது. நான் திரையில் புகைபிடிப்பது போல் நடிக்க மாட்டேன் "என்று ராஷ்மிகா கூறினார்

Share this story