ராஷ்மிகா விவகாரம் எதிரொலி.... ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு...

ராஷ்மிகா விவகாரம் எதிரொலி.... ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு...

தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.  இவர் தொடர்ந்து கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

இந்நிலையில், டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் நடிகை ராஷ்மிகாவை தவறாக சித்தரித்து வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதற்கு வேதனை தெரிவித்து ராஷ்மிகா இணையத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு பிரபலங்கள், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.

ராஷ்மிகா விவகாரம் எதிரொலி.... ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு...

இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, செயற்கை தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்தினால்,  3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் வீடியோவை நீக்க வேண்டும் என்று சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Share this story