குபேராவை தொடர்ந்து ராஷ்மிகா நடிக்கும் படம் -என்ன தலைப்பு தெரியுமா ?

ராஷ்மிகா மந்தனா குபேரா படத்தில் நடித்திருந்தார். கடந்த 20-ம் தேதி திரைக்கு வந்த இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.இந்த படம் தமிழ் தெலுங்கு இரு மொழியிலும் நல்ல வசூலை பெற்று கொடுத்துள்ளது .இப்படம் 100 கோடிக்கு மேல் வசூலாகி இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .இந்த படத்தில் ரஷ்மிகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்ட பட்டது .இதற்கு முன்பு ராஷ்மிக்கா புஷ்பா படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தார் ,இந்த படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய அளவில் சாதனை புரிந்தது .அடுத்து ராஷ்மிக்கா எந்த படத்தில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்
இந்நிலையில் ''புஷ்பா'' நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் அடுத்த படத்தின் பெயரை படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ''மைசா'' என பெயரிட்டுள்ளனர்
அந்தப் படத்தை ரவீந்திர புல்லே எழுதி இயக்குகிறார். அஜய் மற்றும் அனில் சயபுரெட்டி ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில், ராஷ்மிகா 'மைசா' என்ற கதாபாத்தில் ராஷ்மிகா நடிக்க உள்ளார்