ரத்தம் திரைப்படம் நவம்பர் 3-ம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ்

ரத்தம் திரைப்படம் நவம்பர் 3-ம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ்

விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படம் வரும் நவம்பர் 3-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்பினிட்டி ஃப்லிம் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் ‘தமிழ் படம்’,’தமிழ் படம்2’ மூலமாக சினிமாவை கலாய்த்த சி.எஸ் அமுதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ரத்தம்’. அரசியல் கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.  இந்த படத்தில் விஜய் ஆண்டனி, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. 

ரத்தம் திரைப்படம் நவம்பர் 3-ம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ்

இந்நிலையில், ரத்தம் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் நவமபர் 3-ம் தேதி ரத்தம் திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story