சோசியல் மீடியாவுக்கு டாட்டா காட்டிய இயக்குநர் ‘ரத்னகுமார்’- என்ன காரணம் தெரியுமா?

photo

லியோ பட வெற்றி விழாவில் ‘எவ்வளவு உயர பறந்தாலும் பசிக்கு கீழே வந்துதான் ஆகவேண்டும்’ என கூறி சர்ச்சை வளையத்துக்குள் சிக்கி சோசியல் மீடியாவின் பேசுபொருளானார். இந்த நிலையில் தற்போது தான் சமூகவலைதளத்திலிருந்து பிரேக் எடுக்க உள்ளதை அறிவித்துள்ளார்.


 

‘மேயாத மான்’ படத்தின் மூலமாக  இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். இவர் மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் நேற்று நடந்த லியோ சக்சஸ் மீட்டில் ‘எவ்வளவு உயர பறந்தாலும் பசிக்கு கீழே வந்துதான் ஆகவேண்டும்’ என ரஜினியை மறைமுகமாக கிண்டலடித்து பேசியதாக சமூகவலைதளத்தில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பும், ஆதரவும் பெருகிவருகிறது. இந்த நிலையில் தற்போது ‘எழுதுவதற்காக ஆப்லைன் செல்கிறேன், அடுத்த படத்தின் அறிவிப்பு வரும் வரை சமூகவலைதளத்திலிருந்து பிரேக் எடுக்கிறேன்’ என கூறியுள்ளார்.

Share this story