‘ஒரு நாள்..’- ‘ரத்தம்’ படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியீடு.

விஜய் ஆண்டனியின் நடிப்பில் தயாராகியுள்ள ‘ரத்தம்’ படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடலான ‘ஒரு நாள்’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இன்பினிட்டி ஃப்லிம் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் ‘தமிழ் படம்’,’தமிழ் படம்2’ மூலமாக சினிமாவை கலாய்த்த சி.எஸ் அமுதன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ரத்தம்’. அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.
‘ஒரு நாள்’ என துவங்கும் இந்த பாடலை பாடகரும், பாடல் ஆசிரியருமான தெருக்குரல் அறிவு , விஜய் ஆண்டனி இணைந்து பாடியுள்ளனர். கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவரும். ‘ரத்தம்’ படம் தியேட்டரில் வரும் 6ஆம் தேதி ரிலீஸ்ஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.